common

வெடிக்காய்

வெடிக்காய் என்பது கிரந்திநாயகம் என்ற தாவரத்தின் பெயராகும். இத்தாவரத்தில் காய்கள் முற்றி, காய்ந்ததும் ஈரலிப்பால் வெடிக்கக்கூடியன. உலர்ந்த காய்களை தண்ணீரில் போட்டால் “டப்” என்ற சத்தத்துடன் வெடிக்கும். சிறுவர் இதனை விளையாடுவர். எச்சில் பட்டாலும் இது வெடித்துவிடும்.

பின்வரும் காணொளியில் அத்தாவரத்தையும், அதன் பூ, காய், காய்ந்த பழம் என்பவற்றைக் காணலாம். மேலும் மூன்று விதங்களில் இதன் காய்ந்த பழங்கள் வெடிப்பதையும் காணலாம்.

common

மஞ்சள் இரத்தினக் கல்

மஞ்சல் இரத்தினக் கற்கள் பல வகையுண்டு. இவற்றில் “சபையர்” (Sapphire) எனப்படும் மஞ்சல் இரத்தினக் கற்களில் பல நிற வேறுபாடுகள்  உள்ளன. மென் மஞ்சள் முதல் அடர் மஞ்சள் முதலிய நிறக் கற்கள் உள்ளன. இவற்றில் பொன் மஞ்சள் அதிகம் விரும்பப்படுகின்றது. தங்கம் போன்ற அதன் நிறம் அழகாக உள்ளதால் பலரின் விருப்பத்திற்கு காரணமாகின்றது.

கீழே உள்ள காணொளியில் இலங்கையில் கிடைத்த மஞ்சள் மற்றும் பொன் மஞ்சள் சபையர் இன மஞ்சல் இரத்தினக் கற்களைக் காணலாம். பொதுவாக சபையர் இரத்தினங்கள் நீல நிறம் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் · common

செல்பேசியால் ஏற்படும் பக்க விளைவுகள்

செல்லிடத் தொலைபேசி (செல்பேசி அல்லது நகர்பேசி) இன்று மனித வாழ்வில் மிக நெருக்கமாகக் கலந்துவிட்ட ஓர் கருவியாகிவிட்டது. இது மின்காந்த அலைகளைப் (electromagnetic radiation) பயன்படுத்துகின்றது. இதனால் பலவித தாக்கங்கள் எமக்கு ஏற்படக்கூடும்.

செல்பேசியால் ஏற்படும் பக்க விளைவுகள்
செல்பேசியால் ஏற்படும் பக்க விளைவுகள்

மின்காந்த உறிஞ்சுதல்

செல்பேசி வெளிவிடும் வானொலி அலைகள் உடலினால் உறிஞ்சப்படுகின்றன. இந்த வானொலி அலைகள் ஒரு வாட்டைவிடக் குறைவானது. செல்பேசி வெளிவிடும் சக்தியானது இடத்திற்கேற்ப மாறுபடும். எ.கா: கட்டடத்தின் உள்ளேயும், கட்டடத்திற்கு வெளியேயும் மாறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாடும் வெளியேற்றப்படும் சக்தியின் அளவைத் தீர்மானிக்கின்றன. ஐக்கிய அமெரிக்கா 1.6 W/kg என வரையறுத்துள்ளது.

வெப்பத் தாக்கம்

செல்பேசி பயன்படுத்தும்போது வெப்பம் வெளியேற்றப்படுகிறது. இதன் தாக்கமானது சூரிய ஒளி நேரடியாக தலையில் படுவதற்கு ஒப்பாகவுமிருக்கலாம். மூளையின் இரத்தத் சுற்றோட்டம் மேலதிகமான வெப்பத்தை வெளியேற்ற இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஆயினும், கண் விழி வெண்படலம் இவ்வாறான வெப்பக் கட்டுப்பாட்டுப் பொறிமுறையை கொண்டிருப்பதில்லை. 2 – 3 மணி நேர வெப்பத்திற்குட்படல் (41 °C) முயல்களின் கண்களில் கண்படலத்தை உருக்க வல்லது எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் குரங்குகளை சோதனை செய்தபோது கண்படலத்தை உருவாகவில்லை.

வெப்பமற்ற தாக்கங்கள்

வெப்பமற்ற தாக்கம் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. தாக்கம் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. சில ஒன்றுக்கொன்று முரணான அல்லது மாறுபட்ட முடிவுகளைக் கொண்டுள்ளன. பொதுவாக, குளுக்கோசு வளர்சிதை மாற்றம் ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது. பின்வருவன குறிப்பிடத்தக்க வெப்பமற்ற தாக்கத்தின் விளைவுகள் என நம்பப்படுகின்றன. குறிப்பு: செல்பேசி பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்ற முடிவுக்கு வரலாகாது. அதீத பாவனை அதற்கு ஒரு காரணியாகலாம். ஆயினும், இது தொடர்பில் நாம் முடிவெடுத்தல் கூடாது. ஆய்வுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

 • குருதி மூளைத்தடுப்புத் தாக்கம்
 • புற்றுநோய்
 • புலனுணர்வுத் தாக்கங்கள்
 • மின்காந்த மிகு உணர்ச்சி
 • மரபணு நச்சுத் தாக்கம்
 • நடத்தைத் தாக்கங்கள்
 • விந்தணு எண்ணிக்கை, தரத் தாக்கம்

பிற தாக்கங்கள்

இவற்றைவிட மின்காந்த அலைகளை வெளிப்படுத்தும் தளங்கள், கோபுரங்கள் என்பன அயலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்த வல்லன. சில நாடுகள் இது தொடர்பில் குறித்த தளம் எந்தளவு வெளிப்படுத்தலைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டுள்ளன.

மின்காந்த அலைகளை வெளிப்படுத்தும் தொடர்பு சாதனங்களுடன் அதிக நேரம் செலவிட்டு வேலை செய்யும் பணியாளர்கள் பாரியளவு தாக்கத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் சாதாரண செல்பேசி பயன்படுத்துபவர்களைவிட அதிகம் தாக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டியவராவர்.

common

இன்றைய நாளில் இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் அல்லது இலங்கை தொடர்பாக இடம்பெற்ற முக்கிய சம்பவம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக: 1 ஜனவரி 1910 அன்று இலங்கை தொடர்பான முக்கிய நிகழ்வு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? பலரின் விடை தெரியாது என்பதாகத்தான் இருக்கும்.

இன்றைய நாளில் இலங்கை
இன்றைய நாளில், இலங்கை

இவ்வாறான விடயங்களை அறிந்து கொள்ள நாம் இணையத்தைத்தான் நாட வேண்டியுள்ளது. அதன் மூலம் நமக்கு தகவல் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால் நீங்கள் ஒரு டயலொக் அல்லது எயார்டெல் (ஹட்ச் சேவையும் தொடங்கவுள்ளது) வாடிக்கையாளராக இருப்பின், உங்களுக்கு அது இலகுவாகிவிடும். நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில்

REG 2day என உங்கள் செல்பேசியில் தட்டச்சு செய்து 77177 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் (SMS) அனுப்பினால் போதுமானது.

இதன் மூலம் நீங்கள் “இன்றைய நாளில் இலங்கை” என்ற சேவையைப் பெற இணைந்து கொள்கிறீர்கள். இதனால் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இச்சேவைக்கு மாதாந்தம் குறைந்த கட்டணமாக ரூபா 30.00 + வரி உங்களிடமிருந்து அறவிடப்படும். சேவை தேவையில்லாவிட்டால் UNREG 2day என செல்பேசியில் தட்டச்சு செய்து 77177 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பிவிடுங்கள்.

குறுந்தகவலின் சில எடுத்துக்காட்டுகள் (1 ஜனவரி இடம்பெற்றவை):

 • முதலாவது தொலையச்சு (telex) சேவை கொழும்பிற்கும் காலிக்கும் இடையில் 1858 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • யாழ்ப்பாணத்திற்கான முதலாவது காவல் துறை 1866 இல் அமைக்கப்பட்டது.
 • 1872 இல் ரூபாயும் சதமும் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
 • வட-கிழக்குப் பிராந்தியம் வடக்கு, கிழக்கு என இரு மாகாணங்களாக என 1872 இல் பிரிக்கப்பட்டன.
 • “ශ්‍රී” (சிறி) எழுத்து வாகனத் தகட்டில் 1958 இல் பொறிக்கப்பட்டு நடைமுறைக்குள்ளானது.
 • பரந்தன் நகர் விடுதலைப் புலிகளிடமிருந்து 2009 இல் இலங்கை இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டது.

ஜனவரி 1 இல் பிறந்த பிரமுகர்கள்:

 • அலவி மௌலானா
 • முகம்மத் நஜிப் அப்துல் மஜீத்

ஜனவரி 1 இல் இறந்த பிரமுகர்கள்:

 • சி. டபிள்யூ. தாமோதரம்பிள்ளை
 • வி. அகிலேசப்பிள்ளை
 • ரி. மகேஸ்வரன்
 • பி. சந்திரசேகரன்

இதுபோன்ற முக்கியமான, பொது அறிவுமிக்க, புதுப்புதுத் தகவல்களை தினமும் உங்கள் செல்பேசியில் பெற REG 2day என செல்பேசியில் தட்டச்சு செய்து 77177 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி இலங்கை பற்றிய பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: குறுந்தகவல்கள் ஆங்கிலத்தில் மட்டும் அனுப்பப்படும். [To read in English, click HERE]

common

உங்களுக்குத் தெரியுமா (இலங்கை)?

இலங்கை பற்றிய முக்கிய குறிப்புக்கள் அல்லது அது பற்றிய மிக முக்கிய பொது அறிவு உங்களுக்கு உள்ளதா? எ.கா : இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியக் களங்கள் எத்தனை, அவை யாவை என உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா (இலங்கை)
உங்களுக்குத் தெரியுமா (இலங்கை)?

இவை போன்ற விடயங்கள் எமக்குத் தெரிந்திருக்காது அல்லது அவற்றை மறந்துவிட்டிருப்போம். ஆனால் அவற்றை ஒருவர் நினைவுபடுத்தினால் இலங்கை பற்றிய பொது அறிவை அதிகப்படுத்த முடியும். நீங்கள் ஒரு டயலொக் அல்லது எயார்டெல் (ஹட்ச் சேவையும் தொடங்கவுள்ளது) வாடிக்கையாளராக இருப்பின், உங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில்

REG dyklk என உங்கள் செல்பேசியில் தட்டச்சு செய்து 77000 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால் போதுமானது.

இதன் மூலம் நீங்கள் “உங்களுக்குத் தெரியுமா (இலங்கை)?” என்ற சேவையைப் பெற இணைந்து கொள்கிறீர்கள். இதனால் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இச்சேவைக்கு மாதாந்தம் குறைந்த கட்டணமாக ரூபா 30.00 + வரி உங்களிடமிருந்து அறவிடப்படும். சேவை தேவையில்லாவிட்டால் UNREG dyklk என செல்பேசியில் தட்டச்சு செய்து 77000 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பிவிடுங்கள்.

குறுந்தகவலின் சில எடுத்துக்காட்டுகள்:

 • உங்களுக்குத் தெரியுமா 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு மூலம் சிலோன் என்ற பெயர் சிறி லங்கா என மாற்றப்பட்டது?
 • உங்களுக்குத் தெரியுமா கல் விகாரையின் சிற்பங்கள் ஒற்றைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன?
 • உங்களுக்குத் தெரியுமா அனுராதபுரம் சிலுவை இலங்கைக் கிறிஸ்தவத்தின் பண்டைய சின்னமாகும்?
 • உங்களுக்குத் தெரியுமா இலங்கையில் யுனெஸ்கோ பாரம்பரியக் களங்கள் 8 உள்ளன?
 • உங்களுக்குத் தெரியுமா உலகின் முதலாவது பெண் பிரதமரை கொண்ட நாடு இலங்கையாகும்?
 • உங்களுக்குத் தெரியுமா இலங்கையில் நீளமான மகாவலி ஆறு 335 கி.மீ நீளமுடையது?
 • உங்களுக்குத் தெரியுமா உலகின் பெரிய நட்சத்திர நீலக்கல்லாக “ஆதாமின் நட்சத்திரம்” ($ 100 மில்லியன் பெறுமதி) இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது?
 • உங்களுக்குத் தெரியுமா உலகின் பெரிய அநாதை யானைகளின் பராமரிப்பு நிலையம் இலங்கையில் காணப்படுகின்றது?

இதுபோன்ற விசித்திரமான, பொது அறிவுமிக்க, புதுப்புதுத் தகவல்களை தினமும் உங்கள் செல்பேசியில் பெற REG dyklk என செல்பேசியில் தட்டச்சு செய்து 77000 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி இலங்கை பற்றிய பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: குறுந்தகவல்கள் ஆங்கிலத்தில் மட்டும் அனுப்பப்படும். [To read in English, click HERE]

அறிவியல்

நிறங்களும் அவற்றின் குணங்களும்

நிறங்கள் பற்றிய அறிவியல் உண்மையும், அவற்றில் சில நீங்கள் அறிந்திராத 15 விடயங்கள் இங்கே காணப்படுகின்றன.

உலகில் கிட்டத்தட்ட 40 வீதமானோரால் விரும்பப்படுவதால் அதிகம் விரும்பப்படும் நிறமாக நீலம் உள்ளது.

கொசுக்கள் நீல நிறத்தை விரும்புகின்றன.

ஆங்கிலத்தில் ஆரஞ்சு எனப்படும் செம்மஞ்சள் நிறத்தின் பெயர் ஆரஞ்சுப் பழத்தில் இருந்து பெறப்பட்ட பெயராகும்.

செம்மஞ்சள் கோப்பையில் இருக்கும் சூடான சாக்லேட் மற்ற கோப்பையினுள் இருப்பதைவிட அதிக சுவையுள்ளதாகிறது.

சிவப்பு நிறத்தை ஆண்கள் ஒரு மாதிரியாகவும் பெண்கள் வேறு ஒரு மாதிரியாகவும் காண்கின்றார்கள்.

குழந்தையின் முதல் கவனத்தைப் பெறும் நிறமாக சிவப்பு உள்ளது.

சிவப்பு நிறம் சோதனையின்போது எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

இளஞ்சிவப்பு நிறம் மனதிற்கு இதமளிக்கக் கூடியது.

மற்ற நிறங்களைவிட மஞ்சள் நிறத்தை நீங்கள் 1.24 தடவைகள் அவதானிக்கின்றீர்கள்.

மஞ்சள் நிறம் குமட்டலை ஏற்படுத்தக்கூடியது.

மஞ்சளும் சிவப்பும் பசியை அதிகரிக்கக்கூடியன.

இலண்டன் பாலம் பச்சை நிறத்தினால் பூசப்பட்டதும் தற்கொலை செய்யும் விகிதம் 34 வீதமாகக் குறைவடைந்தது.

ஒரே அளவு கொண்ட கருப்பு, பச்சைப் பெட்டிகளில், பச்சைப் பெட்டியே பாரம் குறைந்ததாகக் கருதப்படும்.

வெள்ளை நிற வாகனங்கள் விபத்தை அதிகம் தவிர்க்கக்கூடியன.

கருப்பு என்பது நிறமல்ல. அது ஒளி இன்மையால் ஏற்படும் நிறங்கள் அற்ற நிலையாகும்.

 

motivation

ஒரு பாடம்

இந்த வீடியோவில் இருப்பது ஒரு பச்சைப் பஞ்சுருட்டான் அல்லது பச்சை ஈப்பிடிப்பான் எனப்படும் குருவியாகும். இது ஒருபோதும் சும்மா ஒரு இடத்தில் இருந்து கொண்டிருக்காது.

தோல்வி, வலி, ஏமாற்றம், வேலையின்மை, உணவில்லை, அன்பில்லை போன்ற காரணங்கள் காரணங்கள் நிச்சயமாக நம்மை சோர்வுக்குள்ளாக்கிவிடும். இதனால், நாம் சந்தர்ப்பங்களை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறோம்.

சந்தர்ப்பங்களுக்காகத் காத்திருக்காதீர்கள். உங்களுக்கு இறக்கைகள் உள்ளன. வானந்தான் எல்லை.

மனத்திற்குத் தாழ்ப்பாள் போடாதீர்கள்.

நீங்கள் சிறைக்கைதியல்ல.

நீங்கள் பறக்கும் பறவையைப் போன்ற ஒருவர்.

வானத்தில் உங்கள் கனவுகளைத் தேடுங்கள்.

இப்போதே பறக்கத் தொடங்கிவிடுங்கள்!