கவிதை

ஏழையின் ஹைக்கூ

poor

தூக்கம்

ஏழைக்குக் கிடைக்கும்

கொஞ்ச நேர

சொர்க்கம்


கனவு

ஐந்து நட்சத்திர ஹோட்டல்

செல்ல ஏழைக்குக் கிடைத்த

இலவச பற்றுச்சீட்டு


பசி

உடலுக்கும் உயிருக்கும்

உள்ள தொடர்பு மாதிரி

வயிற்றுடன் உள்ள தொடர்பு


ஏழை

பணமில்லா

இராச்சியத்தின்

குடிமகன்


பிச்சை

எல்லா வழிகளும் அடைக்கப்பட

வாயும் வயிறும்

திறந்த வழி


பணம்

உடலுக்கு உயிர் போல இருப்பதால்

ஏழையின் உயிரை ஊசலாட வைக்கும்

காலன்

கவிதை

எதற்கு?

அரிசி விலை
அதிகரிக்கையில்
அதிகமான
பானைகள்
எதற்கு?

 

 

இக்கவிதை படத்திற்கு கவிதை எழுதும் போட்டி இல 24ல் சிறப்புக்குரிய  கவிதையாக தினமுரசு பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. © Anton Cruz

 The above picture is mostly similar to the original picture.

கவிதை

வேற்றுமை

சந்திரனில் இறங்கிய
வீரர் கண்ட வேற்றுமை,
‘இங்கே மனிதரில்லை!
அங்கே மனிதமில்லை!’

 

இக்கவிதை படத்திற்கு கவிதை எழுதும் போட்டி இல 152ல் சிறப்புக்குரிய  கவிதையாக தினமுரசு பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. © Anton Cruz

 The above picture is mostly similar to the original picture.

கவிதை

இரண்டில் ஒன்று

சரிந்திருந்தாலோ
நிமிர்ந்திருந்தாலோ
நேரம் – பத்து பத்துதான்
சமாதானமோ
சண்டையோ
தமிழர் எமக்குத்தான்

 

இக்கவிதை படத்திற்கு கவிதை எழுதும் போட்டி இல 440ல் பரிசுக்குரிய கவிதையாக தினமுரசு பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. © Anton Cruz

 The above picture is mostly similar to the original picture.

கவிதை

நாளைய சந்ததிக்கு….

தோண்டப்பட்ட
சூரியக்கந்தையையும்
தோண்டப்படாத
செம்மணியையும்
செதுக்கி வை!

 

இக்கவிதை படத்திற்கு கவிதை எழுதும் போட்டி இல 265ல் பரிசுக்குரிய கவிதையாக தினமுரசு பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. © Anton Cruz

 The above picture is similar to the original picture

கவிதை

பைசா

பைசாவை
விட்டுவிடுங்கள்!
இங்கே
பைசா இல்லாது சரியும்
மக்களை கொஞ்சம்
நிமிர்த்தி விடுங்கள்!

 

 இக்கவிதை படத்திற்கு கவிதை எழுதும் போட்டி இல 419ல் பரிசுக்குரிய கவிதையாக தினமுரசு பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. © Anton Cruz

 The above picture is mostly similar to the original picture.

கவிதை

முயற்சி

baby ducks

முயலாது
முடங்கிக் கிடப்பதைவிட
முயன்று
முடவனாவது மேல்!

 

சிறகில்லையென
சிறுமைப்பட மாட்டேன்
சின்னக் கால்களினாலே
சிறப்பாய் பாய்வேன்!

 

 
 
இக்கவிதை படத்திற்கு கவிதை எழுதும் போட்டி இல 429ல் பரிசுக்குரிய கவிதையாக தினமுரசு பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. © Anton Cruz
 
The above picture is mostly similar to the original picture.