motivation · Self-help

ஆற்றலின் 48 விதிகள்

ஆற்றலின் 48 விதிகள் (The 48 Laws of Power) என்ற நூல் ரொபட் கிறீன் என்பவரால் எழுதப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன.  அந்த நூல் குறிப்பிடும் முக்கியமான கூற்றுக்கள் சிலவற்றின் தமிழாக்கம் இங்கே:

The 48 Laws of Power Tamil

தன்னுடைய சொற்களைக் கட்டப்படுத்தாதவன் தன்னையும் கட்டுப்படுத்த மாட்டான். அவன் மதிப்புக்கும் தகுதியற்றவன்.

உன்னுடைய தனித்திறமையையும் உன்னையும் உலகிற்கு நீ வெளிப்படுத்தும்போது, சீற்றம், பொறாமை, பிற பாதுகாப்பற்ற வெளிப்படுத்தல்கள் போன்றவற்றை இயற்கையாகவே நீ தூண்டிவிடுவாய். மற்றவரின் இவ்வாறான சிறுமைத்தனமான உணர்வுகள் பற்றி கவலைப்படுவதில் நீ உன் வாழ்க்கையை செலவிடத் தேவையில்லை.

செயற்பாட்டின் வழி நிச்சயமில்லாவிட்டால், அதனைச் செய்ய வேண்டாம். உன்னுடைய சந்தேகமும் தயக்கமும் செயற்படுத்தலில் தொற்றிவிடும். துணிவின்மை ஆபத்தானது. ஆகவே, துணிச்சலாகச் செல்வதே சிறப்பானது. துணிவுக்கூடாக நிகழ்ந்த எந்தத் தவறையும் இன்னும் அதிக துணிவுடன் இலகுவாக திருத்திக் கொள்ள முடியும். ஒவ்வொருவரும் துணிவைப் பாராட்டுகிறார்கள். யாரும் துணிவின்மையைப் புகழ்வதில்லை.

நட்பும் காதலும் ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய விருப்பங்களுக்கு குருடாக்கிவிடுகிறது.

மாற்றத்திற்காகவோ அல்லது வதந்திகளுக்காகவோ உன்னுடைய தனிச்சிறப்பை விட்டுவிட வேண்டாம். இது உன்னுடைய வாழ்க்கையின் கலைப்படைப்பு. இதனை நீதான் செதுக்க வேண்டும், சாணை தீட்ட வேண்டும். ஒரு கலைஞனுக்குரிய கவனத்துடன் வெளிக்காட்ட வேண்டும்.

பல முக்கியமான சிந்தனையாளர்கள் சிறைச்சாலைகளில்தான் உருவாக்கப்படுகிறார்கள். அங்குதான் ஒன்றும் செய்யாமல் சிந்தனை மட்டும் செய்ய முடியும்.

நண்பர்களிடத்தில் விழிப்பாயிரு. அவர்கள் பொறாமையால் இலகுவாக தூண்டப்படுவதால், மிகவும் விரைவாக உன்னை மறுதலித்துவிடுவார்கள். அவர்கள் கெட்டு, முறைகேடானவர்களாக மாறிவிடுவார்கள். ஆனால் உன் முந்தைய எதிரியை வாடகைக்கு அமர்த்து. அவன் தன்னை நிரூபிப்பதற்கு அதிகம் இருப்பதால், நண்பனைவிட மிகவும் உண்மையாக இருப்பான். ஆகவே, எதிரியைவிட நண்பனிடத்தில் அதிகம் பயப்பட வேண்டும். உனக்கு எதிரியே இல்லாவிட்டால், அவர்களை உருவாக்கும் வழியைத் தேடு.

மேய்பனைத் தாக்கு, மந்தைகள் சிதறிவிடும்.

ஆற்றலுக்கான திறவுகோல் என்பது உன்னுடைய எல்லா விரும்பங்களுக்கும் ஏற்ற சிறந்தவர்களை கண்டு கொள்வதாகும். நண்பர்களை நட்புக்காக வைத்துக்கொள். ஆனால், திறமையுடனும் தகுதியுடனும் வேலை செய்.

கடவுளே, நண்பர்களிடமிருந்து என்னைக் காத்தருளும். எதிரிகளை நான் பார்த்துக் கொள்வேன்.

மனித நாவு மிருகம் போன்றது. சிலர்தான் அதனை வெற்றி கொள்கிறார்கள். அது தன்னுடைய கூட்டை உடைத்து வெளியேற தொடர்ந்து முயற்சிக்கிறது. அது அடைக்கப்படாவிட்டால், கொடியதாக மாறி உன்னை தேவனையில் ஆழ்த்திவிடும்.

இறக்கும் தருவாயில் இருந்த ஒரு அரசியல் வல்லுனரிடம் இளவரசர் கேட்டார் “உன்னுடைய எல்லா எதிரிகளையும் அரசன் மன்னிக்கிறாரா?”. பதிலாக, “என்னுடைய எதிரிகள் எல்லோரையும் நான் மன்னிக்கவில்லை. அவர்கள் எல்லோரையும் நான் சுட்டுவிட்டேன்.”

உன்னுடைய சொந்தப் பாணியில் அரசன் போலவே இரு. அரசன் நடத்தப்படுவது போலவே நடந்து கொள்.

நினைவிற்கொள்: சிறந்த வஞ்சகமானவர்கள் அவர்களின் போக்கிரித்தனமான பண்புகளை மறைக்க அவர்களால் செய்யக்கூடிய எதையும் செய்வார்கள். மற்றவர்களிடம் அவர்களின் வஞ்சகத்தனத்தை மாறுவேடமாக்க நேர்மையின் ஆகாயத்தை ஒரு இடத்தில் பயிரிடுவார்கள். அவர்களிடம் உள்ள ஆயுதங்களில் நேர்மை என்பது சாதாரண பொறியாகும்.

மற்றவரைவிட சிறப்பாக காட்டிக் கொள்வது எப்போதும் ஆபத்தானது. இதைவிட பெரிய ஆபத்து என்னவென்றால் பிழையோ அல்லது குறைவோ இல்லாது காட்டிக் கொள்வதுதான். பொறாமை இரகசிய எதிரிகளை உருவாக்கும்.

சமூகம் உன்னில் சுமத்தும் பாத்திரத்தை ஏற்காதே. உன்னை மீளவும் உருவாக்க புதிய அடையாளத்தை வார்ப்பிடு. மாற்றவர்கள் உன்னில் உருவாக்குவதற்குப் பதில் உன்னுடைய உருவத்திற்கு நீயே பொறுப்பாகவிரு.

ஒருபோதும் பெறுமதியான நேரத்தை அல்லது மனதின் சமாதானத்தை மற்றவர்கள் நிமித்தம் வீணடிக்க வேண்டாம். இது மிகவும் அதிகமான விலை.

ஆற்றலின் விளையாட்டை வெற்றி கொள்ள, உன்னுடைய உணர்வுகளை நீ ஆள வேண்டும். சுய கட்டுப்பாட்டை வெற்றி கொள்ள முடிந்தாலும், உன்னைச் சுற்றியுள்ள உணர்ச்சிமயமான அமைப்புக்களை உன்னால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. அதுவே பெரும் ஆபத்தை வழங்குகிறது.

கவிதை

ஏழையின் ஹைக்கூ

poor

தூக்கம்

ஏழைக்குக் கிடைக்கும்

கொஞ்ச நேர

சொர்க்கம்


கனவு

ஐந்து நட்சத்திர ஹோட்டல்

செல்ல ஏழைக்குக் கிடைத்த

இலவச பற்றுச்சீட்டு


பசி

உடலுக்கும் உயிருக்கும்

உள்ள தொடர்பு மாதிரி

வயிற்றுடன் உள்ள தொடர்பு


ஏழை

பணமில்லா

இராச்சியத்தின்

குடிமகன்


பிச்சை

எல்லா வழிகளும் அடைக்கப்பட

வாயும் வயிறும்

திறந்த வழி


பணம்

உடலுக்கு உயிர் போல இருப்பதால்

ஏழையின் உயிரை ஊசலாட வைக்கும்

காலன்

common

கண் பார்வையற்றவரும் விளக்கும்

ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த கண் பார்வையற்றவர் தான் இரவில் செல்லும் நேரங்களில் எல்லாம் தன்னுடன் ஒரு எரியும் விளக்கையும் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

blind man and lamp short story

ஒரு நாள் இரவில் வழமைபோல் எரியும் விளக்குடன் அவர் சென்று கொண்டிருக்கும்போது, அவர் சென்ற வழியில் சிலர் வந்து கொண்டிருந்தனர்.

வந்தவர்களில் ஒருவன் கண் பார்வையற்றவரிடம் குறும்புத்தனம் செய்ய விரும்பினான். ஆகவே, அவன் “நீங்கள் ஏன் எரியும் விளக்குடன் செல்கிறீர்கள்? உங்களுக்குத்தான் கண் தெரியாதே?” எனக் கேட்டான்.

கண் பார்வையற்றவர் அமைதியாக, “இந்த விளக்கு எனக்காக அல்ல, உங்களைப் போல் கண் பார்வையுள்ளவர்களுக்கானது. நீங்கள் கண் பார்வையற்றவரைக் கவனியாது, அவரைத் தள்ளி, விழச் செய்யாமல் இருப்பதற்காகவே நான் இதை கொண்டு செல்கிறேன்” என்றார்.

பதிலைக் கேட்ட அவர்கள் வெட்கம் அடைந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவ்விடம் விட்டு அகன்றனர்.

கருத்து:

  • பேசு முன் இரு தடவைகள் யோசி.
  • ஒரு செயலுக்குப் பின் பொருள் இருக்கும் என்பதால், முன் அனுமானம்  எப்போதும் ஏற்றதல்ல.
motivation

நேர முகாமைத்துவம்

காலையில் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு 86,400 ரூபாய்கள் வைப்பிலிடப்படுகின்றன என கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் இங்கு அடுத்த நாள் மிகுதி எதுவுமில்லாமல் போகின்றது. ஒவ்வொரு நாள் மாலையும் நீங்கள் பயன்படுத்தாமல் விட்ட பணம் நீக்கப்படுகின்றது.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு சதத்தையும் பயன்படுத்த கட்டாயம் முயல்வீர்கள்.

நேர முகாமைத்துவம்
நேர முகாமைத்துவம்

நேர முகாமைத்துவம் / நேர மேலாண்மை

நாம் ஒவ்வொருவரும் நேரம் எனும் வங்கியைக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் அதற்கு 86,400 வினாடிகள் வைப்பிலிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவை நீக்கப்படுகின்றன. அடுத்த நாளுக்கு, முன்னைய நாளில் இருந்து எந்த வினாடியும் கொண்டு செல்லப்படுவதில்லை. அதற்கு அனுமதியும் இல்லை. ஒவ்வொரு நாளும் புதிய வினாடிகள் வைப்பிலிடப்பட்டு, அந்நாளின் முடிவில் அவை இல்லாமல் போகின்றன. நாம் அதனைப் பயன்படுத்தாமல் விட்டால் அவை அப்படியே நீங்கி விடுகின்றன. நாம் அதை இழந்து விடுகிறோம்.

நாளைக்கு இன்றைய நாளில் இருந்து எந்த வினாடியையும் கொண்டு செல்ல முடியாது. இன்றைய நாளின் வைப்பினை இன்றே பயன்படுத்த வேண்டும். நலம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவற்றுக்கு இன்றைய நாளை பயன்படுத்தி விடுங்கள். நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பயனுள்ள வழிகளில் அதனைப் பெருமளவு செலவு செய்துவிடுங்கள்.

நேரத்தின் பெறுமதியை பின்வரும் சந்தர்ப்பங்களை சந்தித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

பரீட்சையில் தோற்ற மாணவருக்கு ஒரு வருடத்தில் பெறுமதி என்னவென்று புரியும்!

குறைப்பிரசவம் செய்த தாய்க்கு ஒரு மாதத்தின் பெறுமதி என்னவென்று புரியும்!

வாராந்த நாளிதழ் வெளியிடும் ஆசிரியருக்கு ஒரு வாரத்தின் பெறுமதி என்னவென்று புரியும்!

காத்திருந்த காதலருக்கு ஒரு மணித்தியாலத்தின் பெறுமதி என்னவென்று புரியும்!

தொடருந்தைத் தவறவிட்ட பயணிக்கு ஒரு நிமிடத்தின் பெறுமதி என்னவென்று புரியும்!

விபத்திலிருந்து தப்பியவருக்கு ஒரு வினாடியின் பெறுமதி என்னவென்று புரியும்!

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டவருக்கு ஒரு நுண்ணொடியின் பெறுமதி என்னவென்று புரியும்!

கவிதை

என் இனிய பென்டியமே!

என் இனிய பென்டியமே!

my dear pentium

 

அந்தக் கணினிகூட

Boot ஆகிவிடுகிறது

ஏன் பெண்ணே – உனக்கு

இன்னும் காதல் mood வரவில்லை?

 

Dir/a/p கொடுத்தும்

உன் மனது தெரியவில்லை

Mem/c கொடுத்தும்

பயனில்லை – மனசு தெரியவில்லை!

 

உன்னை மறக்க

Deltree/y *.* கொடுத்தால்

மனசு Access Denied

சொல்கிறது

மனதெல்லாம் Bad Sector

வருகிறது.

 

நான் MD Love என்றால்

நீயோ RD Love என்கிறாய்

Prompt $I love you என்றாலோ

Prompt $H என்கிறாயே

Path = You என்றேன்

Set Comspec = I am என்றேன்

http://i.love.you என்றேன்

பதில் மட்டும் cls கண்ட

Screen ஆய் உள்ளது.

 

உன்னிடம் F1 அழுத்தினால்

நீயோ Ctrl+alt+del அழுத்துகிறாய்

மனசுக்கு இனியும் Guard

வேண்டாம்

நான் Chernobyl உம் அல்ல

HIV யும் அல்ல.

 

Email அனுப்பினால்

உன் Inbox தடுக்கிறது

எனக்கோ இதயம்

1000kbps வேகத்தில்

துடிக்கிறது.

 

என் இனிய பென்டியமே

என் இறுதி Output இதுதான்

ஒன்று Format/q/u/v:I am You:

அல்லது Shutdown!

 

இக்கவிதை தமிழ் கம்யூட்டர் சஞ்சிகையில் 23.08.1999 அன்று பிரசுரமானது.

common

செல்லிடத் தொலைபேசி நன்னடத்தைகள்

செல்லிடத் தொலைபேசி இன்று மனித வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. வயது, பால், இன, மத, சமூக வேறுபாடுகள் இன்றி சகல தரப்பினரும் இதனை பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்பம் என்னதான் வசதிகளைச் செய்து தந்தாலும், அதனைப் பயன்படுத்தும் நாம் எதைச் செய்யலாம், எதைத் செய்யக்கூடாது என்ற வரையறைகளைக் கொண்டிருப்பது அவசியம். நாம் வெளிப்படுத்தும் நன்னடத்தை அல்லது ஒழுக்கம் என்பவற்றைக் கொண்டு மற்றவர் நம்மை மதிப்பிடுவர். செல்லிடத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் செல்லிடத் தொலைபேசியை எப்படிப் பயன்படுத்துவது என்று கையேடுகளைத் தருகின்றன. ஆனால் “செல்லிடத் தொலைபேசி நன்னடத்தைகள்” என்றோ “செல்லிடத் தொலைபேசி ஒழுக்கக் கோட்பாடு” என்றோ ஒன்றைத் தருவதில்லை. ஆனால் அவை அவசியம் என்பதை நம்மிடம் காணப்படும் செல்லிடத் தொலைபேசி பாவனை முறை காட்டுவதைக் காணலாம். திருக்குறள் கூறுவதுபோல் “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி“. எனவே செல்லிடத் தொலைபேசி நன்னடத்தைகள் எம்மிடம் காணப்பட்டால் நல்லதே!

நகர்பேசி நன்னடத்தைக் கையேடு
நகர்பேசி நன்னடத்தைக் கையேடு
  • மெதுவாகப் பேசுங்கள்.
  • முக்கியமான விடயம் பேசும்போது செல்லிடத் தொலைபேசி அணைத்துவிடுங்கள்.
  • மற்றவர்களுடன் உணவருந்தும்போது செல்லிடத் தொலைபேசி பாவனையைத் தவிருங்கள்.
  • நீங்கள் பேசுவதை பக்கத்தில் உள்ளவர்களும் கேட்பார்கள் என்பதால் சொற்களில் கவனமாகவிருங்கள்.
  • பொது இடங்களில் இருந்து தனிப்பட்ட பிரச்சனைகளைப் பேசுவதைத் தவிருங்கள்.
  • முடிந்தவரை செல்லிடத் தொலைபேசி ஒலியை நிறுத்தி வையுங்கள்.
  • மற்றவர்கள் இருக்கும்போது அழைப்பு வந்தால், தள்ளிச் சென்று பேசுங்கள்.
  • வாசிகசாலை, நூதனசாலை, கோயில் (வணக்கத்தலம்), உணவு விடுதி, பாடசாலை, விரிவுரை கூடம், கூட்டம், மரண வீடு, திருமண வீடு, படமாளிகை போன்ற இடங்களில் செல்லிடத் தொலைபேசியில் பேச வேண்டாம்.
  • கூட்டம், வகுப்பறை போன்ற இடங்களில் இருந்து கொண்டு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டாம்.
  • செல்லிடத் தொலைபேசியின் ஒலிபெருக்கியை மாற்றவர் இருக்கும்போது பயன்படுத்த வேண்டாம்.
  • தொல்லை கொடுக்கும்விதமாக திரும்பத்திரும்ப குறித்த நேர இடைவெளியில் அழைப்பை ஏற்படுத்த வேண்டாம்.
  • நீங்கள் அழைக்கும் ஒருவர் இன்னொரு தொடர்பில் இருப்பதை அறிந்தால், மீண்டும் உடனடியாக அழைப்பினை ஏற்படுத்த வேண்டாம்.
  • பேசும் இடத்தில் அதிச ஒலி (இரைச்சல்) இருந்தால், பேச வேண்டாம்.
  • பேசும்போது இருமல், தும்மல், உண்ணுதல் ஆகியவற்றைத் தவிருங்கள்.
  • நீதிமன்றத்திலும், விமானப் பயணத்திலும் பாவனை வேண்டாம்.
  • நடந்து செல்கையில், குறிப்பாக பாதையைக் கடக்கையில் பயன்படுத்த வேண்டாம்.
  • வாகனம் ஓட்டும்போது செல்லிடத் தொலைபேசி பாவனை வேண்டவே வேண்டாம்.
  • செல்லிடத் தொலைபேசியை நீங்கள் கட்டுப்படுத்துங்கள். அது உங்களை கட்டுப்படுத்த அனுமதியாதீர்கள்!
common

மட்டக்களப்பு

மட்டக்களப்பு (Batticaloa) “மீன் பாடும் தேன் நாடு” என அழைக்கப்படுகின்றது. இது இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றும், நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

மட்டக்களப்பு
மட்டக்களப்பு

மட்டக்களப்பு மான்மியம் கூறுவதன்படி மட்டக்களப்பு எனும் பெயர் காரணப் பெயராக அமைந்துள்ளது. இலங்கைமீது படையெடுத்த வட இந்திய முற்குகர், கிழக்குப் பக்கம் தமது ஓடத்தைச் செலுத்தி, மட்டக்களப்பு வாவியின் எல்லை வரை சென்று, அதற்கு அப்பாற் செல்ல வழியில்லாததால் இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா (இந்தக்களப்பு இதுவரையும்தான்) எனக் கூறி மட்டக்களப்பு எனும் பெயரை இட்டனர். “மட்டமான” களப்பு என்பதனால் “மட்டக்களப்பு” எனவும் கூறப்படுகிறது. மட்டமான என்றால் சமதரையான என்றும் அர்த்தம் கொள்ளலாம். மட்டக்களப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘Batticaloa’ (பற்றிக்கலோ) போர்த்துக்கீச சொல்லிலிருந்து உருவாகியது.

மட்டக்களப்பு
மட்டக்களப்புச் சின்னம்
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு மாகாணம்
மாவட்டம் மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவு மண்முனை வடக்கு
ஆட்சி
 வகை மட்டக்களப்பு மாநகர சபை
அடை பெயர் மட்டுநகர்
கடல் மட்ட ஏற்றம் 14 மீட்டர்
மக்கள்தொகை (2011)
 மொத்த மக்கள் 92,332
அழைசுருக்கம் மட்டக்களப்பான்/மட்டக்களப்பார்
நேர வலயம் இலங்கை நேர வலயம் (ஒ. ச. நே +5:30)
அஞ்சல் குறியீடு 30000
தொலைபேசி குறியீடு 065
ஆள்கூறுகள் 7°43′0″வ 81°42′0″கி